विवेचन सारांश
பரமாத்ம தத்துவம்
Please type theஸ்ரீமத் பகவத்கீதை விளக்கவுரை - தொகுப்பு-
அத்தியாயம் 15: புருஷோத்தம யோகம்
முன்னுரை
விளக்குபவர் : கீதா ப்ரவீணா ரூபல் ஷுக்லா
YouTube இணைப்பு: https://youtu.be/AdDrgYkZ5jg
ஜெய் ஸ்ரீகிருஷ்ணா
15 ஆம் அத்தியாயம் புருஷோத்தம யோகம் -- உத்தம புருஷரைப் பற்றிய யோகம்
கீதா பரிவாரின் இந்த அமர்வினை யோகேஸ்வரரையும் வணக்கத்திற்குரிய ஸ்வாமிஜி கோவிந்த தேவ் கிரி மஹாராஜ் அவர்களையும் பிரார்த்தித்து வணங்கித் தொடங்குகிறோம்.
பிரார்த்தனை என்பது ஆத்மாவானது உணர்வுபூர்வமாகப் பரமாத்மாவை உதடுகளால் உச்சரித்து வணங்குவதே ஆகும்.
இதன் பின்னர் குத்து விளக்கேற்றி, பிரம்ம தேவனின் துணைவியான, சகல ஞானங்களின் உறைவிடமான ஸரஸ்வதி மாதாவின் அருளை வேண்டுகிறோம்.
ஒளியானது அறியாமை என்னும் இருளை அகற்றி நிலையான ஞான ஒளியினை எங்கும் வியாபிக்கச் செய்வதாகும். .
இந்தச் சொற்பொழிவை நம் வணக்கத்திற்குரிய அனைத்து குருக்களையும் பிரார்த்தனை செய்து அவர்களின் ஆசிகளை வேண்டிக்கொண்டு, வணங்கித் தொடங்குகிறோம்.
குரு என்பவர் நம்மை நம் ஆன்மீகப் பாதையில் வழி நடத்தும் கலங்கரை விளக்காகத் திகழ்பவர் ஆவார். அவரின் உதவியும் வழிகாட்டலும் இல்லையெனில், நாம் நம் பாதையில் குறுக்கிடும் ஆசைகள் மற்றும் கவனச் சிதறல்களால் வழி தவறி இலக்கின்றி சென்று விடுவோம்.
ஸதாஷிவ ஸமாரம்பா4ம் சங்கராசார்ய மத்4யமாம்||
அஸ்மத்2 ஆசார்ய பர்யந்தாம் வநதே2 கு3ரு பரம்பராம்||
எல்லாம் வல்ல ஸதாசிவன் முதல் ஆதி சங்கரர் வரை, மற்றும் என் குருநாதர் உட்பட அனைத்து ஆசான்களையும் மிகுந்த மரியாதையுடன் தாள் வணங்கி என் விரிவான. உரையைத் தொடங்குகிறேன்.
சம்சாரவ்ருக்ஷ : வாழ்க்கை மரம் எனப்படுவது ஆலமரம் போன்றது. இது வாழ்க்கை எனும் நதியினை உருவகப்படுத்துகிறது. இதுவே கண்ணுக்குப் புலப்படாத பிரம்மனின் தோற்றமாகத் தோன்றுகிறது.
பகவத் கீதையின் 15-வது அத்தியாயம் புருஷோத்தம யோகம் - உன்னத நிலையை அடைந்தவரின் யோகம் எனப்படுகிறது.
பக்தி யோகம் எனப்படும் 12-வது அத்தியாயத்தில் ஒரு உண்மையான பக்த்தனின் 36 வகை குணாதிசயங்கள் என்னவென்று அறிந்துகொண்டோம்.
இனி புருஷோத்தம யோகத்தை பற்றிக் கூறுவதை இந்த 15-வது அத்தியாயத்தில் காண்போம். இந்த அத்தியாயத்தின் முடிவில் பகவான், புருஷோத்தமனின் ஸ்வரூபத்தை முழுமையாக விவரிக்கின்றார். எனவே ,12-வது அத்தியாயம் “ஆத்மனைப்” பற்றியது எனில், 15-வது அத்தியாயம் “பரமாத்மாவை” பற்றியதாகும்.
நாம் முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயனால் இந்த விலை மதிப்பற்ற மனித உடம்பினை தெய்வ அருளால் பெற்றுள்ளோம். இப்பிறவி நம் கைகளாலும், உதடுகளாலும் (பேச்சினாலும்), மனப்பூர்வமாக பரமாத்மாவிற்கு நம் சேவையை அர்பணிக்கக் கிடைத்துள்ள ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
இந்த மானுடப் பிறப்பில் யாவரும் பகவானாலேயே அருளப்பட்ட தெய்வீகப் பாடலான பகவத் கீதையினைக் கற்று அதன் வழியே நடக்க விரும்பினாலும் பல்வேறு காரணங்களினால் அவர்களால் நடைமுறைப் படுத்தமுடியவில்லை.
மேலும், கீதையை கற்பதற்க்கு வாய்ப்பு கிடைத்தவர்களும் கூட அது மனிதகுலத்திற்கு தரும் நன்மையை உணராது அதன் வழியில் நடக்க மறுக்கிறார்கள்.
//ஸ்ரீஹரி//
வஸுதேவ3ஸுதம் (ந்) தே3வம் (ங்), கம்ஸ(கௌவ்ம்ஸ) சாணூரமர்த3னம் /
தே3வகீ பரமானந்த3ம்(ங்) க்ருஷ்ணம் வந்தே3 ஜக3த்3 கு3ரும் //
கீதா பரிவாரில் இணைந்துள்ள நாம் பெரும் பாக்கியம் பெற்றவர்களாவோம். ஏனெனில் கீதா பரிவார் நமக்கு, இம்மை மற்றும் மறுமை ஆகிய இரு உலகத்தின் சிறப்பை வெளி காட்டுகிறது. கீதா பரிவாரில் இணைந்துள்ள நாம் அனைவரும் கீதையினைக் கற்று அதன் வழி நடக்க சிறந்த வாய்ப்பு நமக்கு அமைத்து கொடுக்கப் பட்டுள்ளது.
‘’யமேவைஷ வ்ருணுதே தேன லைஷ’’
நாம் நமக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. நாம் நமக்காக எதையும் தேர்ந்தெடுக்கவில்லை மேலும் தேர்ந்தெடுக்கவும் முடியாது. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவே பகவான் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்துள்ளார். இதனையே “யமேவைஷ வ்ருணுதே தேன லைஷ்” (यमेवैष वृणुते तेन लैष”) தெரியப்படுத்துகிறது.
இங்கு, நம் அனைவரையும் தெய்வீகப் பாடலான பகவத் கீதையை படித்து, மற்றவர்களையும் படிக்க வைத்து அதன் வழி வாழ்க்கையில் நடந்து கொள்ள நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
சுருக்கமாகக் குறிப்பிட்டால் பகவான் நம்மை, கீதா பரிவாரின் மூன்று பொன்னான முக்கிய வழிகளை பின்பற்றத் தேர்ந்தெடுத்துள்ளார்.
கோடிக்கணக்கான லக்ஷக்கணக்கான மக்களிடையே பகவான் நம்மை தேர்ந்தெடுத்துள்ளதால், அவர் காட்டிய வழியில் முழு அர்ப்பணிப்புடன் பயணித்து, 18 அத்தியாயங்களையும் நன்கு கற்று, நம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு அதனை தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
கீதையின் முதல் அத்தியாயத்தின் 28, 29 மற்றும் 30 வது ஸ்லோகங்களில் ,
தோல்வியே அறியாத சிறந்த போர்வீரன் அர்ஜுனன். போரில் தன் உறவினர்களையும், குருமார்களையும் கொல்வதற்கு திடமற்ற அவனது நிலையற்ற மன உறுதியையும், உடலின் இயலாமையையும் மேற்கோள் காட்டுகிறார். இருந்தாலும் பகவான் அர்ஜுனனுக்கு கீதையை கூறவில்லை.
ஒரு நீண்ட உரையாடலுக்குப் பின்னர் 2-வது அத்தியாயத்தின் 7-வது
ஸ்லோகத்தில் கீழ்கண்டவாறு அர்ஜுனன் பரமேஸ்வரரை ஆர்வத்துடன் தான் பின்பற்ற வேண்டிய சரியான வழி பற்றி முழு ஈடுபாட்டுடன் வேண்டுகிறார்.
அதன் பின்னரே பகவான் 2-வது அத்தியாயத்தின் 11-வது ஸ்லோகத்தில் அர்ஜுனனுக்கு ஆலோசனை வழங்கிறார், அதற்கு முன்பு அல்ல.
பகவான் கூறுகிறார்
யதார்த்தத்தின் உண்மைப் பற்றி கூற ஆரம்பிக்கும் பொழுது, ஞானம் பற்றி விவரித்து, “ஞானம் மிக்க வார்த்தைகள் பேசும் நீ புலம்பி வருத்தப்படுவதற்கு தேவையே இல்லை. உண்மையான ஞானி அறிவு உள்ளவன் உயிருடன் இருப்பவர்களுக்காகவோ, இறந்தவர்களுக்காகவோ வருத்தப்படுவதில்லை.”
பரம பூஜ்ய சுவாமி மகாராஜ் கூறுவது என்னவென்றால்-வேதங்களே அறிவாற்றலின் மூலமாகும். அவையே நாம் அன்றாடம் ஆன்மீக பாதையில் மேற்கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக் கொடுத்து வழி நடத்துபவையாகும். ஆனால் வேதங்கள் பகவானாலும் அவரின் தூதர்களாலும் அருளப்பட்டதன் சாராம்சமேயாகும்.
ஆனால் கீதை என்பது பகவானே சாதாரண மக்களாகிய நமக்கு அர்ஜுனன் மூலமாக குருக்ஷேத்திரம் என்கிற தர்மக்ஷேத்திர போர் முனையில் அருளியது.
பகவான் பரமேஸ்வரரின் வாய்மொழியாக அருளப்பட்ட பகவத் கீதையினை நாம் கற்கும்போது தெய்வீக உணர்ச்சியின் ஆனந்தத்தில் திளைத்து மூழ்க வேண்டும்.
பகவத் கீதையின் 12-வது , 15-வது அத்தியாயங்கள் சற்றே சிறியது.
எனவேதான், கீதா பரிவார் நம்மை கீதை வழிப்பாதையில் எளிதாகப் பயணிக்க, முதலில் இவ்வத்தியாயங்களைக் கற்பிக்கிறார்கள். தொடக்கத்தில் நமக்குக் கீதை கற்பது கடினமாகத் தோன்றினாலும் இந்த இரு சிறிய அத்தியாயங்களையும் கற்ற பின், நம்முடைய நம்பிக்கை பன்மடங்கு பெருகி 18 அத்தியாயங்களையும் எளிதில் விரைவாகக் கற்று நம் ஆன்மீக பயணத்தின் உச்சியினை அடையலாம் என்பது நிச்சயமாகும்.
இந்த 15-வது அத்தியாயத்தில் ஸ்ரீ பகவான் வாழ்க்கையின் ஒரு புதிய தத்துவத்தினைக் கூறவிருக்கிறார்.
நாம் பல ஆன்மீக மற்றும் கீதை சொற்பொழிவுகளில், தோற்றுவித்தல் (creation) அல்லது உருவாக்கம் என்பதை ஒரு கற்பனையான தலை கீழ் மரம் என்பதை உவமையாகக் கொண்டு கூறுவதைக் கேட்டிருப்போம்.
ஆனால் இந்தத் தலைகீழ் மரம் எங்கு, எப்போது , எதற்கு, எந்த சந்தர்ப்பத்தோடு உருவகப்படுத்தப்பட்டுள்ளது?
இதற்கான விடை இந்த 15-வது அத்தியாயத்தில் உள்ளது.
முதலாவது ஸ்லோகத்தில் ஆரம்பித்து இந்த தலைகீழ் மரம் பற்றி முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.
இனி 15-வது அத்தியாயத்தின் அனைத்து ஸ்லோகங்களையும் விரிவாகக் காணபோம் .
------------------------------------------------- ----------------------------------------------
ஜெய் ஸ்ரீகிருஷ்ணா introduction text here or remove it.

15.1
ஸ்ரீ ப4க3வானுவாச
ஊர்த்4வமூலமத4:(ஶ்) ஶாக2ம், அஶ்வத்த2ம்(ம்) ப்ராஹுரவ்யயம் ।
ச2ந்தா3ம்ஸி யஸ்ய பர்ணானி, யஸ்தம்(வ்) வேத3 ஸ வேத3வித் ॥15.1॥
ஸ்ரீ பகவான் கூறுகிறார்: இந்தப் பிரபஞ்சம் அரசமரம் போல் ஆனது.ஆதி-புருஷனான பரமேஸ்வரன் வேராகவும் பிரம்மதேவன் முக்கிய நடுமரமாகவும் உருவமான இந்த பிரபஞ்ச அரசமரத்தை அழியாதது என கூறுகின்றேன். இந்த பிரபஞ்ச மரத்திற்கு வேதங்களே இலைகளாகும், ஸம்ஸாரம் (பிரபஞ்சம்)என்ற இந்த அரச மரத்தை எந்தபக்தன் வேருடன் சேர்த்துத் தத்துவரீதியாக அறிகிறாரோ அவரே வேதத்தின் உட்கருத்தை அறிந்தவர் ஆகிறார்.
ஸ்ரீ பகவான் கூறுகிறார்:
அஸ்வத்தா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், பரமாத்மா தனது படைப்பான இந்த சம்சாரம் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதையும், இன்றைய ஜடவுலகம் எப்பொழுதும் அப்படியே இருக்க வாய்ப்பில்லை என்ற உண்மையையும் நினைவூட்டுகிறார்.
இந்த மரத்தை பகவான் அஸ்வத்தா என்று வர்ணித்தார், அங்கு அ=இல்லை, ஷ்வா=நாளை, தா=நின்று/எஞ்சியது; ஆதி சங்கராச்சாரியார் இதை “ஒருவன் இன்று போல் நாளை இல்லை” என்று பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டு விளக்குகிறார்.
இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் - பரமாத்மா இந்த ஜட உலகத்தை எந்த ஒரு சீரற்ற மரத்துடனும் இல்லாமல், ஆல மரத்துடன் ஒப்பிடுகிறார். ஏன் அப்படி? ஏனெனில், ஆல மரம் மிகவும் நிலையற்றது. சுற்றிலும் காற்று இல்லாத போதும் அதன் இலைகள் எப்போதும் அசைந்து கொண்டே இருக்கும். அதே போல, மனித மனமும் நிலையற்றது மற்றும் மனது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கும், ஒரு பொருள் மீதுள்ள நோக்கத்திலிருந்து மற்றொன்றுக்கும் நகர்கிறது.
யோகேஸ்வரர் இந்த உலகம் அவ்யயம் அதாவது 'நித்தியமானது' அல்லது “அழியாதது” என்று அனைவரும் கருதுவதாக விவரிக்கிறார், அதாவது இருந்தது, இருக்கிறது மற்றும் இனிவரும் காலங்களில் இருக்கும் என்பதாக.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 'சந்தஸ்' என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் முதலாவது கவிதை, குறிப்பாக சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இலக்கியப் படைப்பு. இரண்டாவது பொருள் ஞானம், தெய்வீக அறிவு. மூன்றாவது பொருள் வேதம். இந்த உலகத்தின் துல்லியமான இயற்கை இயல்பை அறிந்தவர் வேதங்களை முழுமையாக அறிந்தவர் என்று பரமேஸ்வரர் இந்த ஸ்லோகத்தை முடிக்கிறார், இதிலிருந்து அறிவது வேதங்கள் வேறொன்றுமில்லை சம்சாரத்தின் தொகுப்பே என்று ஒரு நுட்பமான முடிவுக்கு வரலாம்.
அத4ஶ்சோர்த்4வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஶாகா2 ,
கு3ணப்ரவ்ருத்3தா4 விஷயப்ரவாலா:(ஹா) ।
அத4ஶ்ச மூலாந்யநுஸந்ததானி ,
கர்மாநுப3ந்தீ4னி மநுஷ்யலோகே ।।15.2।।
இந்தப் பிரபஞ்சம் (ஸம்ஸாரம்) என்ற அரச மரத்தின் கிளைகள் முக்குணங்கள் என்ற நீரினால் வளர்ந்து புலன் நுகர்ந்து புதிய தளிர்களுடன் கூடி, தேவர்- மனிதர்- விலங்கு , முதலிய பிறவி உருவாகி மேலும் கீழுமாக எங்கும் பரவியுள்ளன. அவ்வாறே அகந்தை, மமதை, வாசனை உருவான வேர்களும், மனிதப் பிறவியில் கர்மங்களுக்கு ஏற்றவாறு பிணைக்கப்பட்டு மேலும் கீழுமாக எல்லா உலகங்களிலும் பரவியுள்ளன.
இந்த ஸ்லோகமானது த்ருஷ்டுப் சந்த். ஆகையால் இதன் ராகம் பாராயணம் செய்வதற்கேற்றவாறு மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஸ்லோகத்தை புரிந்துகொள்ள கீழ் உள்ள வரைபடத்தில் குறிப்பு காண்க.
இந்தப் பிரபஞ்சத்தின் கட்டமைப்பை விளக்குவதற்காக ஸ்ரீ பகவான் விரிந்த அஸ்வத்தம் என்னும் ஆல மரத்தின் வடிவமைப்பை உவமைப் படுத்துகிறார்.
இதனை நோக்கின் அதன் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு :
* இந்த மரம் தலை கீழாக அமைந்துள்ளது.
* இதன் வேர்கள் மேற்புறம் உள்ளன.
*கிளைகளும் இலைகளும் கீழ் நோக்கி அமைந்துள்ளன .
*மூலம் என்னும் மேற்பகுதியில் உருவம் மற்றும் உருவமற்றவராக ஸ்ரீ பகவான் உறைகிறார்.
*தண்டு போன்ற நடுப்பகுதியில் இந்தப் பிரபஞ்சம் அனைத்தையும் படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிரம்மா ஜீ உள்ளார்.
ஸத்ய லோகம், தபோ லோகம், ஜனோ லோகம், மஹர லோகம், ஸ்வர்க்க லோகம், புவர் லோகம் (பித்ருலோகம்), பூலோகம் , அதல லோகம், விதல லோகம், சுதல லோகம், தலாதல லோகம்,மஹாதல லோகம், ரஸாதல லோகம், பாதாள லோகம் எனப்படும் ஈரேழு பதினான்கு லோகங்களும் இந்துமதப் பாரம்பரியத்தின்படி இந்த ஆல மரத்தின் விரிவுப் பகுதிகள் எனப்படுகின்றன.
இந்த லோகங்களில் வசிக்கும் யோனிகள் என்னும் உயிர்களின் விபரங்களும் பின்வருமாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன. தேவதைகள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் , மனிதர்கள், பித்ருக்கள்,விலங்குகள், பறவைகள், செடிகள்,மரங்கள், நீர்வாழ் உயிரினங்கள் போன்றவை.
இந்த சித்திரத்தைக் கூர்ந்து நோக்கினால் தேவயோனி என்பது உயர்ந்த நிலையையும் மனுஷ்யயோனி என்பது அதைவிடத் தாழ்ந்த நிலையையும் மற்றும் விலங்குகள் பறவைகள் போன்ற உயிரினங்களை உள்ளடக்கிய த்ரியகா யோனி என்பது எல்லாவற்றையும் விடத் தாழ்ந்த நிலையில் அமைந்துள்ளதையும் உணரமுடிகிறது.
ஒரு யோனி அமைவதற்கு மூல காரணம் சத்வ, ரஜோ, மற்றும் தமோ என்ற மூன்று குணங்களே. ஆகாயம், மலைகள், ஆறுகள், காற்று, நீர், ஜீவராசிகள் போன்ற பல்வேறானவை உருவாவதற்கும் இது பொருந்தும்.
முந்தைய ஸ்லோகத்தில் ஸ்ரீபகவான் சொன்னதன் தொடர்ச்சியாக இந்த கற்பனையான ஆல மரத்தின் கிளைகள் எங்கெங்கும் பரவியுள்ளதை இங்கு வெளிப்படுத்துகிறார். இதன் கிளைகள் சாத்விக, ராஜசிக மற்றும் தாமசிக என்ற மூன்று குணங்களால் நீரூற்றி வளர்க்கப்படுகின்றன. இந்த மூன்று குணங்கள் வேறு எதுவும் இல்லை நாம் முற்பிறப்பில் செய்த செயல்களின் பயன்களே.
பகவத்கீதையின் ஒரு பிரபலமான கருத்து:
“ கர்மண்யே வாதி4 காரஸ்தே, மா ப2லேஷு கதா3சன,
மா கர்ம ப2ல ஹேதுர்பூ4ர், மா தே ஸங்கோ3த்ஸ்வ கர்மணி”(2.47)
நாம் கர்மாக்கள் செய்வதன் மீது மட்டுமே நமக்கு உரிமை உள்ளது. ஆனால் அந்தச் செயல்களின் பலன்கள் அல்லது விளைவுகளின் மீது உரிமை இல்லை.
இந்தக் கோட்பாட்டின் தொடர்ச்சியாக இதை முக்குணங்கள் தத்துவதுடன் தொடர்பு படுத்துகிறார் ஸ்ரீபகவான் .அதன்படி நாம் அனைவரும் சத்வ குணத்தை வளர்த்துக்கொண்டு தாமசிக குணத்தை தவிர்க்க வேண்டும். நமது செயல்கள் அனைத்தும் நம் குணங்கள் மூலமே ஊட்டப்படுகிறது. நமது குணம் ராஜசிகமாக இருந்தால் நமது செயல்களும் ராஜசிக கர்மாக்களாகவே அமையும் மேலும் மற்ற குணங்களும் அவ்வாறே.
தேனின் நிறத்தில் இருக்கும் இளந்தளிர்கள் என்பவை சப்தங்கள், இயற்கை காட்சிகள், தொடு உணர்வு, வாசனை உணர்வு போன்ற ஜட இயற்கை பொருள் சார்ந்த தூண்டுதல்களோடு ஒப்பிடப்படுகிறது. ஒரு இளந்தளிர் எவ்வாறு அந்தக் கிளையில் இடைவிடாமல் தொடர்ந்து வளர்கிறதோ அவ்வாறே தான் தூண்டுதல்களும் சலனங்களும் நம் மனதில் வளரத் தொடங்கி அதன் மூலம் நமது குணங்களை உருவாக்கிப் பின் நமது செயல்களையும் நிர்ணயிக்கின்றன.
ஶ்ரத்தா த்ரய விபாக யோகம் எனப்படும் பகவத்கீதையின் 17-வது அத்தியாயத்தில் தெளிவாகக் கூறிய படி இந்த மூன்று குணங்களும் நமது செயல்களை மட்டுமல்லாது நாம் உண்ணும் உணவு வகைகளையும் தீர்மானிக்கின்றன . நாம் அன்றாடம் சந்திக்கும் பொருள் சார்ந்த சலனங்களும் தூண்டுதல்களும் நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிப்பதுடன் நாம் உண்ணும் உணவும் இதில் அடங்கும்.
மேலே படத்தில் சித்தரிக்கப்பட்டது போல் நமது இன்றைய வாழ்க்கை நிலை மூன்று வகை
1. ஸத்வகுணவான்,
2. ரஜோகுணவான்,
3. தமோகுணவான்
என்ற அடிப்படையிலேயே அமைகிறது.
இந்த உணர்தல் இந்திரியங்களின் (உணர்வு உறுப்புகள்) செயல்பாடுகளுக்கு நம் இடும் கட்டளையே ஆகும். ஆதலால் இதைக் கையாளும் விதம் என்பது நமது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இறுதியாக நமது செயல்களுக்கு நாமே காரணம் அன்றி வேறு எவர் மீதும் பழியோ புகழோ கூற முடியாது
ந ரூபமஸ்யேஹ ததோ2பலப்4யதே,
நாந்தோ ந சாதி3ர்ந ச ஸம்ப்ரதிஷ்டா2 ।
அஶ்வத்த2மேநம் ஸுவிரூட4மூலம் ,
அஸங்க3ஶஸ்த்ரேண த்3ருடே4ன சி2த்வா ।।15.3।।
இந்த ஸம்ஸார மரத்தின் ஸ்வரூபம் எவ்வாறு சொல்லப்பட்டதோ அவ்வாறு ஆராய்ந்தால் புலப்படுவதில்லை. ஏனெனில் அதற்கு ஆதியும் கிடையாது; அந்தமும் கிடையாது; நிலையான இருப்பும் கிடையாது. எனவே அகங்காரம், மமகாரம், முன்வினை, வாசனை என்ற உறுதியான வேர்களைக் கொண்ட இந்த ஸம்ஸார உருவான அரச மரத்தை உறுதியான வைராக்கியம் என்ற கோடாரியால் வெட்டி எறிந்துவிடு.
இந்த ஸ்லோகத்தில், யோகேஸ்வரர் சம்சாரமானது தலை கீழான இந்த ஆலமரத்தை போன்றது அல்ல என்று விளக்குகிறார். மரத்தின் உதாரணம் சம்சாரத்தின் பரந்த தன்மையை நமக்குப் புரிய வைப்பதற்காகக் கொடுக்கப்பட்டாலும், உண்மை நிலையில் அது முற்றிலும் வேறுபட்டது. அதற்கு எந்த அடித்தளமும் இல்லை, அதை நிலை நிறுத்த மேற்பரப்பில் எந்த ஆதரவும் இல்லை. இதற்கு மேலும் இல்லை அல்லது கீழும் இல்லை (இதற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை). இந்த சம்சாரவ்ருக்ஷத்திற்கு ஆரம்பப் புள்ளியோ அல்லது முடிவுப் புள்ளியோ இல்லை. அது நித்தியமானது.
இந்தச் சூழலில், 'சதுர்தசா புவனானி' என்னும் கருத்தை, அதாவது பதினான்கு லோஹங்களின் கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதில் முதல் 8 லோஹங்கள், இரண்டு கால்கள் கொண்ட மனிதர்களாகிய நம்மை போன்ற உயிரினங்கள் வாழும் மனுஷ்யலோஹத்தை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, வான வரிசை முறையில், நமது லோஹம் ஒன்பதாவது சிறந்த லோஹமாகக் கருதப்படுகிறது.
-10வது லோஹம் என்பது நான்கு கால்கள் கொண்ட விலங்குகளுக்கானது.
- 11வது லோஹம் இரண்டு கால்கள் மற்றும் இரண்டு இறக்கைகள் கொண்ட பறவைகளுக்கானது.
-12 வது லோஹம் பாம்புகள் மற்றும் பல்லிகள் போன்ற ஊர்வனவற்றின் கால்கள் மற்றும் இறக்கைகள் இல்லாத உயிர்களுக்கானது.
-13வது லோஹத்தில் 6 கால்கள் கொண்ட சிலந்திகள், கொசுக்கள், ஆக்டோபஸ்கள் போன்ற பூச்சிகள் உள்ளன.
-மரங்கள் மற்றும் தாவரங்களுக்கான 14வது லோஹம், ஒரு தளத்துடன் முழுமையாக இணைக்கப்பட்ட நகர முடியாத வாழ்க்கையை மட்டுமே நடத்த முடியும் மரங்கள் மற்றும் தாவரங்களுக்கானது.
தாமசிக (கெட்ட) கர்மாக்களால் இந்த விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையை நாம் தொலைத்துவிட்டால், அந்தக் கெட்ட செயல்களின் தீவிரத்தைப் பொறுத்து, அதலலோகம், விதலலோகம், பாதாள லோகம், முதலிய பிரபலமாக அறியப்படும், இந்தத் தாழ்வான லோகங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் நாம் மறுபிறவி எடுப்போம். மாறாக, மனிதனாக வாழும் நிகழ்காலப் பிறப்பில், இந்த விலைமதிப்பற்ற வாழ்க்கையை நாம் புத்திசாலித்தனமாக உன்னதமான செயல்களுடன் நல்ல காரியத்திற்காக உழைத்தால், நாம் சம்பாதிக்கும் மேன்மையின் அளவைப் பொறுத்து சத்தியலோகம், தபோலோகம், ஜலலோகம், மஹர்லோகம், ஸ்வர்கலோகம் போன்ற உயர்ந்த லோகங்களில் ஒன்றில் மறுபிறவி எடுப்போம்.
பகவத்கீதையின் தெய்வீகப் பாடல்கள் இங்கே நம் மீட்புக்கு கைகொடுக்க வருகிறது. ஆனால் எப்படி? எந்தச் செயல் உன்னதமானது, எது தீங்கிழைக்கும் செயல் என்பது நம் அனைவருக்கும் பெரிய அளவில் தெரியும். 5 வயது குழந்தை கூட எது நல்லது எது கெட்டது என்று சொல்லும். ஆனால், அதைச் செயல்படுத்துவதில் தான் சிக்கல் வருகிறது. மற்ற பல வேதங்கள் தத்துவார்த்த விளக்கத்தை நமக்குச் சொல்லும் போது கீதை தெளிவான உதாரணங்களுடன் நடைமுறை நோக்குநிலையை நமக்கு வழங்குகிறது. நமது தற்போதைய வயது மற்றும் மன முதிர்ச்சியின் நிலையைப் பொருட்படுத்தாமல், கீதையில் கற்பிக்கப்படும் சில எளிய நுட்பங்களின் உதவியுடன் நாம் எப்போதும் நம் அன்றாட வாழ்வில் கீதையை பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம்.
இப்போது, இந்தப் பௌதீக உலகத்துடன் நம்மை உறுதியாகப் பிடித்து வைத்திருக்கும் இந்தப் பூமிக்குரிய இணைப்புகளை எப்படி அகற்றுவது என்பது தான் முக்கிய கேள்வி. இதற்கான எளிய தீர்வை பரமாத்மா நமக்குத் தருகிறார். இந்த இணைப்புகள் கூர்மையான கோடாரி போன்ற கருவியால், ஒரே முறையில் வெட்டப்பட வேண்டும். இந்தக் கோடாரி தான் உலகப் பொருட்களில் ‘பற்றுதலை வெட்டிப் பற்றற்ற தன்மையை' உண்டாக்கும் கருவி (ஸ்ரீ பகவத்கீதை).
இந்தக் கருத்தை ஒரு புராண உதாரணத்துடன் சிறப்பாக விளக்கலாம்:
ஒருமுறை மகரிஷி சுகதேவ் மிதிலாவின் அரசன் ஜனகனை, அறிவு சார்ந்த
போதனை பெறுவதற்காக, சந்தித்தார். மிகவும் மங்களகரமான நாளாக இருந்ததால், ஜனக மன்னன் அன்றைய தினம் ஒரு புனிதமான வேள்வியை செய்து கொண்டிருந்தார். ஜனக மன்னன், விளிம்பு வரை எண்ணெய் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தை அவரது கைகளில் கொடுத்து உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சுகதேவரைக் கேட்டுக்கொண்டார். கையில் எண்ணெய் நிரம்பிய பாத்திரத்துடன், எண்ணெய் ஒரு துளி கூட சிந்தாமல் , முனிவர் சுகதேவ், மிதிலா நகரத்தை ஒரு பரிக்ரமா (சுற்றி வருதல்) செய்ய வேண்டும். இருப்பினும், சுகதேவ், அவ்வளவு எளிதான காரியமாகத் தோன்றாத அந்த வேலையை முடித்துவிட்டு, திரும்பி வந்தார். ஜனகனிடம், தனக்கு ஒதுக்கப்பட்ட பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை உறுதிசெய்து, ஒரு சொட்டு எண்ணெய் கூடச் சிந்தாமல் இருப்பதை உறுதி செய்தார். ஆனால், ஜனகர் சுகதேவிடம், மிதிலா நகர் எப்படி இருந்தது ? கோட்டைச் சுவர்கள் எப்படி இருந்தன? அரச மாளிகைகள் எப்படி இருந்தன? போன்ற அலட்சியமான கேள்விகளை எழுப்பினார். இந்தக் கேள்விகளால் சுகதேவ் அதிர்ச்சியடைந்தார். ஜனகனிடம், தனக்கு ஒதுக்கப்பட்ட பணியைச் சம்பிரதாயமாகச் செய்வதிலும், எண்ணெய் நிரப்பப்பட்ட பாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு பரிக்ரமா செய்வதிலும், எந்த விதத்திலும் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் முழு ஈடுபாட்டுடன் இருந்ததாக அவர் கூறினார். ஜனக மன்னன் இந்த பதிலுக்காகவே காத்திருந்தார். உடனே ஜனக மன்னன் முனிவரைப் பார்த்து , அவர் (முனிவர் சுகதேவ்) மிதிலைக்கு வந்த நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும், அவருக்குத் தேவையான விடையை ஏற்கனவே பெற்றுவிட்டதாகவும் கூறினார். அடிப்படைக் கருத்து ‘பற்றற்ற தன்மை’. சுகதேவ் முனிவர், அவரது நீண்ட பரிக்கிரமாவின் போது மிதிலை நகரை எல்லாம் பார்த்துக் கொண்டு வந்தபோதும் சுற்றுப்புறங்களை முற்றிலும் கவனிக்காமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியில் முழுமையாக கவனம் செலுத்துகிறார்.
அது போலவே, நம் வாழ்வில் நாம் நமது கடமைகளைச் சம்பிரதாயமாகச் செய்ய வேண்டும். ஆனால் எந்த உணர்ச்சிகளுடனும், பொருட்களுடனும் இணைந்(த்)து இருக்கக் கூடாது. நமக்கெல்லாம் ஒதுக்கப்பட்ட வேடங்களில் ஈடுபாடு இல்லாமல், அந்தந்த பாத்திரங்களை அர்ப்பணிப்புடன் நடிக்கும் நடிகர்களைப் போலவே நாம் அனைவரும் இருக்கிறோம். இது மட்டுமே முழுமையான ‘பற்றற்ற’ நிலைக்கு வழிவகுக்கிறது.
இப்போது, இந்த ஸ்லோகத்தில், பரமேஸ்வரரால் வழிநடத்தப்பட்டு, 'பற்றின்மை' எனப்படும் கூர்மையான, சக்தி வாய்ந்த கோடரியால் நமது அனைத்து இணைப்புகளையும் அகற்றினோம். மேலும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள் மற்றும் ஆன்மீக செல்வங்களை வழங்கியவருக்கு, இந்த அழகான மற்றும் கடமைக்கான மனித உடலை நமக்கு வழங்கிய பணியின் மீது கவனம் செலுத்துவோம். இணைப்புகள் எனப்படும் அனைத்து வேர்களையும் அறுத்துவிட்டால், நமது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்? இது அடுத்த ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.
தத:(ஃப்) பத3ம்(ந்) தத்பரிமார்கி3தவ்யம்(ய்),
யஸ்மின்க3தா ந நிவர்தந்தி பூ4ய:(ஹ)।
தமேவ சாத்3யம்(ம்) புருஷம்(ம்) ப்ரபத்3யே,
யத:(ஃப்) ப்ரவ்ருத்தி:( ஃப் ) ப்ரஸ்ருதா புராணீ॥15.4
பக்தர்கள் எப்பொழுதும் பகவானின் பாதத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும், ஏனெனில் பரமபதத்திற்கு சென்ற மனிதர்கள் மீண்டும் ஸம்சாரத்திற்கு திரும்பி வருவது இல்லை. அங்கு ஆதிபுருஷனான நாராயணனையே சரணமடைகிறேன் என்ற உறுதியோடு அந்த பரமேஸ்வரனை சிந்தித்துத் தியானிக்க வேண்டும்.
அதன்பிறகு, ஒரு மனிதன் உச்ச நிலையான கடவுளை அடைய விடாமுயற்சியுடன் தேட வேண்டும் (அதாவது கடவுளை அடைந்த பிறகு மீண்டும் இந்த உலகத்திற்குத் திரும்பாத நிலை).
மேலும் ஒருவர் அனைத்தையும் முதன்மையான அவருக்கே( ஶ்ரீ நாராயணர் ) சமர்ப்பிக்க தீர்மானித்து ஆரம்பமே இல்லாத படைப்பில் முன்னேறிக் கொண்டிருக்கும் அவரிடம் வசித்துக் கொண்டே தியானிக்கவேண்டும்.
இப்போது ஆத்மாவின் (மனித ஆத்மாவின்) அடுத்த செயல் பற்றி பார்க்கும் பொழுது பல்வேறு உரைநடையில் கூறியுள்ளபடி நித்தியமானவரும் ஆதிபுருஷருமான புருஷோத்தமர் ஸ்ரீ பகவானே படைப்பின் ஆதாரம், அவரே படைப்பு. அவரே (ஸ்ரீ நாராயணரே ) இறுதி இலக்கின் முடிவு ஆவார்.
ஆத்மா, ஸ்ரீ பகவானை அடையும் பொழுது, இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்து நீக்கப்பட்டு பவஸாகரத்திலிருந்து (வாழ்க்கை கடல்) முழுமையாக விடுவிக்கப்படுகிறார்கள். பரமபதத்தை (பரமேஸ்வரரின் இறுதி உறைவிடம்) அடைவதே ஒருவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பரந்தாமரை அடையும் எவர் ஒருவரும் இந்த ஜட உலகிற்கு திரும்புவதில்லை. இவ்வாறு, உன்னதமான நிலையை அடையும் ஒருவர் பிறப்பு இறப்பு சுழற்சிகளிலிருந்து முற்றிலும் விடுபடுகிறார்கள். மேலும் முக்கியமாக தாழ்வான லோகத்திற்கு தள்ளப்படும் அபாயம் இல்லை.
பரமேஸ்வரர் யார்?
பரமாத்மா இந்த ஸ்லோகத்தில் தன்னைப் பற்றி மேலும் கொஞ்சம் விளக்குகிறார். நினைவு கூறவேண்டிய நித்திய புராண மரமான சம்சாரவ்ருக்ஷம் யாரிடமிருந்து உருவானதோ அந்தப் பரமாத்மாவை சென்றடைவதே நமது முழு முயற்சியாக இருக்க வேண்டும்.
இந்த முழு பயிற்சியும் அதிகபட்ச பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் செய்யப்பட வேண்டும்.
இங்கே, நாம் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், இந்த சம்சாரத்தில் இருப்பதற்கு தேதி, நேரம் போன்றவை எதுவும் ஒதுக்கப்படவில்லை, ஆனால் ‘அனாதி’ பற்றி குறிப்பிடும் பொழுது நித்தியமானது மற்றும் ஆரம்ப நிலை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பரமாத்மாவை தேடும் முதல் படி என்பது சுய சிந்தனையே தவிர பொருள் பற்றி உணர்வு அல்ல.
மாறாக வேதாந்த அர்த்தத்தில் "அஹம் பிரம்மாஸ்மி", என்பது இந்த ஆத்மா பிரம்மனைத் தவிர வேறில்லை.
ஆனால், இந்த சித்தாந்தத்தில் மூழ்குவது என்பது, கடைப்பிடிப்பதை விட சொல்வது எளிது. இந்த கருத்தாக்க அத்வைதக் கோட்பாட்டை, அதாவது ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ஒருமைப்பாட்டை பின்பற்ற மகத்தான முயற்சிகளும் சில விசேஷமான சாதனைகளும் தேவை. இது பற்றி அடுத்த ஸ்லோகங்களில் சர்வ வல்லமையுள்ள ஸ்ரீ பகவானிடம் இருந்து கேட்போம்.
நிர்மானமோஹா ஜிதஸங்க3தோ3ஷா,
அத்4யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா:(ஹா) ।
த்3வந்த்3வைர்விமுக்தா:(ஸ்) ஸுக2து3:க2 ஸம்ஜ்ஞைர்,
க3ச்ச2ந்த்யமூடா4:(ஃப்) பத3மவ்யயந் தத்।।15.5।।
தற்பெருமையும் மோகமும் அகன்றவர்கள், பற்று என்ற குறைபாட்டை வென்றவர்கள், பரமாத்ம ஸ்வரூபத்தில் என்றும் நிலை பெற்றவர்கள், ஆசைகளை முழுமையாக அழித்துக் கொண்டவர்கள், இன்பம் - துன்பம் என்ற பெயர் கொண்ட இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்கள் ஆகிய ஞானிகள், அழிவற்ற பரமபதத்தை அடைகிறார்கள்.
தன்னை பரமாத்மாவுடன் முற்றிலுமாக இணைத்து உன்னத நிலையில் இருந்து கொண்டு பூலோக இச்சைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பும் ஒரு சாதகனிடம் இத்தகைய பண்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன
நிர்மானமோஹா: அகந்தை மற்றும் மாயையிலிருந்து விடுபடுதல்
அகந்தை மற்றும் மாயையிலிருந்து விடுபடுவதே முதல் படி.
ஜீவாத்மா தன்னிடமுள்ள அனைத்து செல்வங்களுக்கும் தானே அதிபதி, தன்னிடம் இன்னும் அதிகமாய் பொருள் சேரும் என்ற மாயையில் இருக்கிறது. அறியாமையால் ஏற்படும் அகந்தையால் அவர்களின் மனம் குருடாகி, இவை அனைத்தும் தங்களின் இன்பத்திற்காகவே என்றும், இவை மகிழ்ச்சியைத் தந்து கொண்டே இருக்கும் என்ற மாயையில் இருக்கிறது . ஆனால் இவை அனைத்திற்கும் உரிமையாளர் இறைவனே என்ற உண்மையை அறிய இயலாததால்., அவரது விருப்பத்திற்கு தன்னை அர்ப்பணிக்க இயலாதவர்களாகிறார்கள்.
ஜிதஸங்க3தோ3ஷா: எல்லாப் பற்றுக்களிலிருந்தும் விடுபடுதல்
"நான்", "என்னுடையது" என்ற எண்ணம் ஓரளவிற்குக் குறைந்தவுடன், தான் இன்னும் எதில் சிக்கியிருக்கிறோம், எவற்றில் பற்று இன்னும் இருக்கிறது என்று கவனம் செலுத்தி அதை அகற்ற வேண்டும். ஒருவன் உடல் மீதும் உணர்ச்சிகள் மீதும் பற்றற்று இருக்க வேண்டும். இது மனம் மற்றும் புலன்களின் கட்டுப்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதனால் பற்றுதலின் விளைவாக ஏற்படும் ஆசைகள் குறைந்துவிடும்.
அத்யாத்மநித்யா: தன்னுணர்வில் நிலையாக இருத்தல்
தான் என்ற சுய அடையாளத்திலிருந்து விடுபட்டிருத்தல் ; ஆன்மீகப் புத்தகங்களைப் படிப்பதிலும், புனிதத் தலங்களுக்குச் செல்வதில் மட்டுமே நிறுத்திக்கொள்ளாமல், விடாமல் சர்வவல்லமையுள்ள இறைவனுடன் இணைந்திருக்கும் ஒற்றுமை உணர்வினைத் தன்னுள் கொண்டு வர வேண்டும் - நானே அவன். அவனே நான்.
நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் ஏனெனில் என்னிடமிருந்து எந்த விதத்திலும் வேறுபடாத அவர் (ஸ்ரீ பகவான்) மகிழ்ச்சியாகவே இருப்பார் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளும் தன்மை- இது அகண்ட சச்சிதானந்தம், சிதானந்தம், ஷிவோஹம் - ஷிவோஹம் போன்ற சில வேத வாசகங்களிலிருந்து அனுமானிக்கப்படுகிறது. இந்த தெய்வீக உணர்வு, ஆறு எதிர் மறை குணங்களான காமம் (ஆசைகள்), க்ரோத (கோபம்), லோபம் (பேராசை), மதம் (ஆணவம்), மோகம் (மாயை), மாத்சர்யம் (பொறாமை) போன்ற அரிஷட்வர்கா விலிருந்து ஒருவரை விடுவிக்கிறது.
விநிவ்ருத்தகாமா:(ஹா) : ஆசைகளிலிருந்து விடுபடுதல்
தன் ஆசைகள் அனைத்தையும் வென்று விடுதல். ஆசை, கோபம், பேராசை, பொறாமை, அகங்காரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி தன்னை பரமாத்மாவின் ஒரு பகுதியாக நினைத்துக் கொள்கிறான்.
*த்வந்தவைர்விமுக்தா: அனைத்து இருமைப்பாட்டிலிருந்து விடுபடுதல்
நல்லது மற்றும் தீமை; இழப்பு மற்றும் ஆதாயம்; சோகம் மற்றும் மகிழ்ச்சி; இன்பம் மற்றும் துன்பம்; தர்மம் மற்றும் அதர்மம் போன்ற எதிர்மறையான இருமை உணர்வுகளை எதிர்கொள்ளும் போது சமநிலையில் இருத்தல் ;
க3ச்ச2ந்த்யமூடா: மடமை நிலையிலிருந்து விடுபட்டிருத்தல்.
மேற்கூறிய மைல்கற்கள் மற்றும் இடைநிலை இலக்குகளை அடைந்த பின்னரே, ஒருவன் ஆத்மனின் இறுதி இலக்காக இருக்க வேண்டிய ‘அவ்யயம்’ (அழிவு நி இல்லாதது) என்ற பரமபதத்தின் நித்திய இலக்கை அடைய முடியும்.
ந தத்3பா4ஸயதே ஸூர்யோ,
ந ஶஶாங்கோ ந பாவக:(ஹ)।
யத்3க3த்வா ந நிவர்தந்தே,
தத்3தா4ம பரமம் மம।।15.6।।
சூரியன், சந்திரன் மற்றும் அக்னிதேவனால் கூட அந்த பரமபதத்தை ப்ரகாசிக்க இயலாது. அங்கு சென்றடைந்த பக்தர்கள் இந்த ஸம்ஸாரத்திற்கு திரும்புவது இல்லை. அது என்னுடைய மேலான இடம் - பரமபதம் ஆகும்.
எதையாவது சாதிக்க அல்லது ஒரு இலக்கை அடைய கடினமாக உழைக்குமாறு நாம் ஒருவரிடம் கூறும் போது, அந்த இலக்கு எப்படி இருக்கப் போகிறது? இறுதி முடிவு எவ்வளவு இனிமையானதாக இருக்கும்? போன்றவற்றையும் அவருக்குக் கூற வேண்டும். அந்த முக்கியமான அம்சங்களை வெளிப்படுத்தாமல், வாசகர்/ கேட்பவர் அந்த இலக்கை / லட்சியத்தை அடைய உற்சாகமாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த ஸ்லோகத்தில், பரமாத்மா (ஸ்ரீபகவான்), ஜீவாத்மாவின் இறுதி இலக்கான அந்தப் பரமபதம் எப்படியானது என்பதை எடுத்துரைக்கிறார்.
பரமபதம் என்பது சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பு போன்ற மூன்று முக்கிய ஒளி மூலங்கள் எதனாலும் ஒளியூட்ட முடியாத ஒரு இடம், பொருள் அல்லது கருத்துள்ள நிறை அமைப்பு ஆகும். பொருள்களை ஒளிரச் செய்யும் ஆற்றல் கொண்ட ஒளிக்கு ஆதாரம் ஸ்ரீபகவானை தவிர வேறு எதுவும் இல்லை. அதாவது பரமாத்மா பகவான் சுயமாக ஒளிர்கிறார். ஒளி என்பது ஆற்றல் என்பதை நாம் அறிவோம். அது போலவே, அவர் வேறு எந்தப் பொருளாலும் இயக்கப்பட வேண்டியதில்லை. அவர் தன்னிறைவு உடையவர் மற்றும் சுய உந்துதல் கூடியவர்.
அவர் மேலும் கூறுகிறார் – பரமபதா என்கிற இடத்தை அடைந்த ஒருவர் மீண்டும் திரும்புவதில்லை. அதாவது, பரமாத்மாவை அடைந்த ஜீவாத்மா எந்த லோகத்திலும் மறுபிறவி எடுக்க மாட்டார். மனுஷ்ய லோகத்திற்கு கீழே உள்ள தாழ்வான லோகங்களையும் சேர்த்து.. ஏனென்றால் அவரே பரமாத்மா ஆகிவிடுகிறார்.
இறைவனின் மிகவும் பொருத்தமான நாமமான 'ஸத்-ஸித்-ஆனந்த ரூபா' (ஸத் + ஸித் + ஆனந்தம்) மூன்று பெயர்களின் கலவையை நினைவு கூர்ந்தால், இரண்டாவது பெயரான 'ஸித்' என்றால் 'நித்தியமான ஒளி' என்று பொருள். வெளிப்படையாக ஒரு 'ஒளி', அதுவும் 'நித்தியமான ஒளி', அதைத் தூண்டுவதற்கு வெளிப்புறத்திலிருந்து எந்த ஒளியும் தேவையில்லை. மாறாக, அதுவே மற்ற பொருள்கள் / உயிர்களுக்கு ஒளியைக் கொடுக்க முடியும். எடுத்துக்காட்டாக, பூமி, சந்திரன் போன்ற பிற பொருள்கள், பிரபஞ்சம் முழுவதும் நித்திய ஒளியை அளிப்பவரான பரமேசுவரனிடமிருந்தே தங்களுக்குத் தேவையான ஒளியைப் பெறுகின்றன.
மாறான பொருள் சார்ந்த கண்ணோட்டத்தில், சூரியன் கூட சுயமாக ஒளிர்வதில்லை. அவர் (சூரியன்) ஒளியின் இறுதி ஆதாரம் அல்ல, ஆற்றலின் முக்கிய வடிவங்களில் ஒன்றேயாகும். இந்தப் பிரபஞ்சத்தின் மற்ற எல்லா கூறுகளைப் போலவே இவரும் (சூரியன்) அந்த இறுதியான ‘சேத்தன் தத்வா’ மூலமே ஒளியைப் பெறுகிறார். இதன் மூலம் மற்ற அனைத்து உலகப் பொருட்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்றன.
மமைவாம்ஶோ ஜீவலோகே, ஜீவபூ4த:(ஸ்) ஸநாதன:(ஹ) ।
மன:(ஷ்) ஷஷ்டா2நீந்த்3ரியாணி, ப்ரக்ருதிஸ்தா2னி கர்ஷதி।।15.7।।
உடலில் என்றும் உள்ள ஜீவாத்மா என்னுடைய அம்சமே. அதுவே பிரக்ருதியில் உள்ள மனம் மற்றும் ஐந்து புலன்களையும் ஈர்க்கிறது.
இந்த உடலில் உள்ள நித்ய ஜீவாத்மா தன்னுடைய அம்சமே என்றும், அந்த அம்சமே ப்ரக்ருதியில் நிலைத்து இருக்கும் .ஐம்புலன்களை ஈர்க்கின்றது என்றும் சொல்கிறார்.
இந்த ஸ்லோகம் கீதையின் மிக முக்கியமான மற்றும் பிரபலமான ஸ்லோகங்களில் ஒன்றாகும். இதன் மூலம் யோகேஷ்வரர் ஆறு இந்திரியங்களின், (ஐந்து புலன்களுடன் கூடிய மனது) நித்திய தொடர்பை நிலையுறுத்துகிறார்
இந்த ஸ்லோகத்தில் பகவான் கிருஷ்ணர்,
தன்னை ''அநாதி" அல்லது "ஸனாதன" என்று குறிப்பிடுகிறார்.
அவர் தன்னை புராதன அல்லது பழமையானவர் என்று கூறி இருக்கலாம். ஆனால் வேண்டுமென்றே அவ்வாறு சொல்லிக். கொள்ளாததற்கு காரணம், ஸனாதனம் புராதனத்தை விட மிக மிகப் பழமையானது. மேலும் இதற்கு ஆரம்பமோ அல்லது முடிவோ இல்லை. இவை எப்போதும் அழிவற்றது மற்றும் நித்தியமானது.
இந்த உரிச்சொல் பரமாத்மாவுக்கு மிகவும் பொருத்தமானது, ஏனெனில் அவர் நித்தியமானவர் .
அவர் ஆறு இந்திரியங்களை குறிப்பிடுகிறார். இது பஞ்ச்சேந்திரியங்கள் - ஐம்புலன்கள் சார்ந்த உறுப்புகள் என்பதற்கு முரணானதாக உள்ளது.
ஐந்து புலன்களின் கூட்டானது
- *த்வாச் ஸ்பர்ஷ் (தொடுவதற்க்கு- சருமம் ,தோல்),
சக்ஷுஷ் ( பார்க்க - கண்கள்)
ஷ்ரோத்ரா (கேட்க -காதுகள்)
ஜுஹ்வா ( சுவைக்க - நாக்கு) மற்றும்
க்ரான ( நுகர்வதற்க்கு - மூக்கு) ஆகும். இவற்றுடன் மனதை இணைத்து ஆறு இந்திரியங்களாக மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
பகவான் ஜீவாத்மா தன்னில் ஒரு பகுதி என்று தெளிவாக அறிவிக்கிறார். அறியாமையினால், ஜீவன்கள் தாங்கள் ப்ரக்ருதியுடன் பிணைக்கப்பட்டதாக நினைக்கிறார்கள். மேலும் தங்களுடைய இந்திரியங்களும் மனமும் ப்ரக்ருதியில் இருந்து உருவானதாக ஐக்கியப் படுத்தி அடையாளம் காண்கிறார்கள்.
ஆனால் , ஜீவன்களின் பெரும்பாலான தீயசெயல்களுக்கு பூர்வ ஜென்ம *"வாஸநா" வும் புலன்களின் தூண்டுதலால் ஏற்படும் சலனங்களும் தான் காரணம் என்பது தெரிந்த உண்மையே. தவறு இந்திரிய புலன்களின் மேல் இல்லை, முழுமையாக ஜீவன்களிடமே உள்ளது.
இந்த நித்தியமில்லாத உயிரினங்கள் தங்களுடைய பூர்வ ஜென்ம வாஸநா வினாலும், மூன்று வகை குணங்களின் தாக்கத்தினாலும் (ஸத்வ, ரஜஸ், தமஸ்) உலக பொருட்களின் மீதும்,செயல்களின் மீதும் தேவையற்ற பற்றும் பந்தமும் ஏற்படுத்திக் கொள்வதோடு அல்லாமல் தேவையற்ற இந்த உணர்வை ஆழமாக வளர்த்துக் கொள்கிறார்கள். இதன் விளைவாக இவர்களுடைய இந்திரியங்கள் ஸாத்வீக குணம் இல்லாத சில விஷயங்களை அடையும் ஏக்கத்திற்கு வற்புறுத்தப்படுகிறது. மற்றும், ஸாத்விக குணங்களை வளர்த்துக் கொள்வதற்கான வழிகள் ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் ஶ்ரீபகவானால் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
ஶரீரம்(ய்) யத3வாப்நோதி, யச்சாப்யுத்க்ராமதீஶ்வர:(ஹ)।
க்3ருஹீத்வைதானி ஸம்யாதி, வாயுர்க3ந்தா4 நிவாஶயாத்॥15.8॥
மணமுள்ள இடத்தில் காற்று பலவிதமான மணங்களை கவர்ந்து செல்வது போல், உடலை ஆள்கின்ற ஜீவாத்மாவும் எந்த உடலை விட்டு கிளம்புகிறதோ, அதிலிருந்து மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக்கொண்டு புதிய உடலில் சேர்ந்து கொள்கிறது.
நமது ஆன்மீகப் பயணத்தில் அடிக்கடி நமக்குள் வரும் சந்தேகங்களில் சில;
எப்படி, ஏன் இந்த உடல் எனும் தெய்வீகப் பரிசு அழிக்கப்படுகிறது?
மரணத்திற்குப் பின் இந்த உடல் என்னவாகிறது?
எவ்வாறு ஆத்மா குறிப்பிட்ட உடல் அழிந்த பின், வேறு உடலுக்குள் கடந்து சென்று மற்றுமொரு விதியாக மாற்றம் அடைகிறது?
இந்த ஸ்லோகம் இது போன்ற பெரும்பாலான கேள்விகளுக்கு தெளிவான விடையளிக்கிறது. இந்த சிக்கலான விஷயத்திற்கு மேலும் தெளிவு ஏற்பட, இந்தச் ஸ்லோகங்களுக்கு சம்பந்தமான மற்ற
சில ஸ்லோகங்களை நாம் பார்போம்.
இரண்டாவது அத்தியாயத்தில் பார்க்கும் போது ஸ்ரீபகவான் நித்ய ஆத்மா மற்றும் பிறப்பு-இறப்பு பற்றிய கருத்துக்களையும் விவரிக்கிறார்
ந த்வேவாஹம்(ஞ்) ஜாதுநாஸம் (ந்), ந த்வம்(ந்) நேமே ஜனாதி4பா: (ஹா) /
ந சைவ ந ப4விஷ்யாம:(ஸ்), ஸர்வே வயமத:(ப்2) பரம் // (2.12)
ஸ்ரீபகவான் கூறுகிறார் - இவ்விதம் நான் எப்பொழுதும் இருந்ததில்லை என்பது இல்லவே இல்லை .நீயும் இருந்ததில்லை. இந்த அரசர்களும் இருந்ததில்லை என்பதும் இல்லை.இனி மேலும் நாம் அனைவரும் இருக்கப் போவதில்லை என்பதும் இல்லை
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா2 விஹாய,
நவாநி க்3ருஹ்ணாதி நரோபராணி
ததா2 ஷரீராணி விஹாய ஜீர்ணான்
யந்யானி ஸம்யாதி நவாநி தேஹீ // (2.22)
ஒரு மனிதன் தனது நைந்து போன ஆடைகளைக் களைந்து விட்டு புதியனவற்றை அணிந்து கொள்வது போல, இறக்கும் தருவாயில் ஜீவாத்மா நைந்து போன உடலை விட்டு புதிய உடலுக்குள் புகுந்து விடுகிறது.
உண்மையில் ஆத்மாவுக்கு பிறப்பு இறப்பு கிடையாது. ஒரு மனிதன் அட்டகாசமாக ஆடையை மாற்றுவது போல, ஜீவாத்மா மிக துல்லியமாக உடலை மாற்றிக்கொண்டு, நித்தியமாக அதன் தொடர்ச்சியை பராமரிக்கிறது. ஆனால் தனியாக ஒரு இலக்கிலிருந்து மற்றொன்றுக்குப் பயணிப்பதில்லை. இந்த ஆத்மாவை வரையரைக்கப்பட்ட புத்தி கொண்டு (லௌகீக் புத்தி) உணர முடியாது. ஏனெனில் பரமாத்மவை உணர ஜீவாத்மாக்கு அலௌகிக புத்தி (எல்லையற்ற புத்தி ) தேவை.
காற்று நல்ல மணம் மற்றும் துர்நாற்றத்தை ஒரு பொருளிலிருந்து மற்றொன்றுக்கு எடுத்துச் செல்கிறதென்று நமக்குத் தெரியும். ஒரு பூந்தோட்டத்திலிருந்தோ அல்லது குப்பைத் தொட்டியிலிருந்தோ மணம் மற்றும் நாற்றத்தை எடுத்து வரும் காற்றுக்கு அரச மாளிகை அல்லது ஏழையின் வீடு என்ற வேறுபாடு இல்லை. அதன் (காற்று) கடமை நன்றோ தீதோ எதுவாயினும் மணத்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்வதே. அவ்வாறே ஆத்மா ஓர் உடலிலிருந்து மற்றோருடலுக்கு செல்லும் போது, வாழ்வில் சேகரிக்கப்பட்ட பதிவுகளை அதன் உணர்வுகளோடு எடுத்துச் செல்கிறது.
அதாவது ஆத்மா இந்திரியங்களுடன் ஓரு உடலை விட்டு வேறு உடலுக்குச் செல்லும் போது, காற்று மணத்தை எடுத்துச் செல்வது போல கர்ம விளைவுகளை தன்னுடன் தற்காலிகமாக எடுத்துச் செல்கிறது. இது ப்ராப்தம் எனப்படும்.
மேலும் காற்றைப் போல, ஆத்மா பதிவுகளை என்றென்றும் எடுத்துச் செல்வதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆத்மா அவற்றை விதியின் வழியில் விட்டுவிடுகிறது. அதாவது ஆத்மா இந்திரியங்களுடன் ஒன்றி இணைவதில்லை. எப்போதும் நடுநிலையோடு எல்லா இணைப்புகளினின்றும் விடுபட்டு நிற்கிறது.
வேதாந்த விஞ்ஞானத்தின் நிலைப்பாட்டின் படி ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்பது நன்கு தெரிந்த கருத்து. இந்தக் கருத்தின் உதவி கொண்டு ஸ்ரீபகவான் தன்னுடைய இருப்பை ஒர் பெருநிலை நோக்கிலிருந்து சிறிய உணர்தல் பற்றிய நிலை வரை விளக்குகிறார். இதன் விரிவு அடுத்த அமர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த சொற்பொழிவு நிறைவடைகிறது. ஹரி நாம சங்கீர்த்தன பாராயணத்துடன் அமர்வு நிறைவடைகிறது.
விளக்க உரை பதிவை நீங்கள் படித்து மகிழ்ந்தீர்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உங்கள் நேரத்தின் மூன்று நிமிடங்களை ஒதுக்கி உங்கள் கருத்துகளை எங்களுக்கு அனுப்பவும். கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்:
https://vivechan.learneeta.com/feedback/
நன்றி - சுருக்கத்தைப் படித்ததற்கு
இந்த விளக்க உரை பதிவை நீங்கள் ரசித்திருப்பீர்கள்! திருத்தம் மற்றும் சரிபார்த்தல் இருந்தபோதிலும், இலக்கண பிழைகள்,புறக்கணிப்பு ஆகியவைகள் இருந்திருக்கலாம் . உங்கள் சகிப்புத்தன்மையை நாங்கள் பாராட்டுகிறோம்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
தொகுத்தவர்: கீதா பரிவார் – கிரியேட்டிவ் ரைட்டிங் துறை
ஒவ்வொரு வீட்டிலும் கீதா! ஒவ்வொருவர் கையிலும் கீதா!
கீதா பரிவாருடன் ஒன்றிணைவோம், நமது கீதா வகுப்புகளை நமது குடும்பத்தினர், நண்பர்கள் & அனைவருக்கும் பரிசளிப்போம்.
https://gift.learngeeta.com/
கீதா பரிவாரின் புதிய முயற்சி.. இப்போது நீங்கள் யூடியூப்பில் வீடியோக்களைப் பார்க்கலாம் மற்றும் முன்னர் நடத்தப்பட்ட அனைத்து விளக்க அமர்வுகளின் PDF களையும் படிக்கலாம்
கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
https://vivechan.learngeeta.com/
கீதை கற்போம், கீதையை கற்பிப்போம்,
கீதையை வாழ்வில் கடைப்பிடிப்போம்!!!
|| ஓம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து||